इस सप्ताह के लिए पिता के ह्रदय से (25/02/2018)
परमेश्वर को पा लेने का मार्ग
मूसा अपने ससुर यित्रो नामक मिद्यान के याजक की भेड़-बकरिया चराता था, और वह उन्हें जंगल की पश्चिमी ओर होरेब नामक परमेश्वर के पर्वत के पास ले गया I
परमेश्वर ने मूसा को पूरी तरह नीचे ले आया, “फिरोंन के महल” से ‘जंगल के पीछे’ , ‘सेवा लेने वाले’ से ‘ससुर की भेड़ चराने वाली सेवा’ तक। निरादर ,शून्यता, खुद में आत्म विश्वास को खो देना, सभी क्षमताओ को खो देना, और सभी आराम को खो देना।वास्तविकता में सभी बातो को खो देना परमेश्वर के पर्वत तक पहुचाने का मार्ग, ताकि परमेश्वर को पा ले ।
“हाँ, वरन मैं अपने प्रभु मसीह यीशु की पहचान की उत्तमता के कारण सब बातो को हानि समझता हूँ जिसके कारण मैंने सब वस्तुओ की हानि उठाई, और उन्हें कूड़ा समझता हूँ, जिससे मैं मसीह को प्राप्त करूँ” ।
जब हमारा प्रभु यीशु क्रूस पर था, उसने हमें पा लेने को सब बातो की हानि उठाई । इसी प्रकार से हमें भी सभी बातो की जो हमारे पुराने स्वाभाव या आदम के जीवन से हैं हानि उठानी हैं ताकि हम उसे ले ले, पा ले । यही कारण है की प्रभु अपनो को ‘जंगल के पीछे’ ले जाता हैं “महल से बंदीगृह, “सब बातो की हानि उठाना,’ इस अनुभव को आप जो भी नाम देवे’ पर यही हैं वो मार्ग उसको पा लेने का । भरने से पहले वो हमे खाली करता हैं ! वो स्वार्थी जीवन को पहले नष्ट करता हैं इसके पहले की वो हमे अपने निवास/पवित्र स्थान बनाये जहाँ वो अपनी महिमा प्रगट करता है ।
ये सब हमे उस स्थान पर लाने के लियें हैं जहाँ हम प्यार से और हर एक बातो के ऊपर आनन्द से उसकी इच्छा पूरी करें I
यीशु गतसमनी की यातनाओ, गब्ब्ता की शर्म और अपमान, और गुलगता का अत्याचार से बढकर पिता की इच्छा पूरी करना ज्यादा पसंद करते थे ।
जब केवल प्रभु की इच्छा पूरी करना — अपने विचारो में, शब्दों और कार्यो में, खुले और गुप्त में करना हमारी प्राथमिकता और हमारा जीवन बन जाती हैं तब हम परमेश्वर का ध्यान आकर्षित करते हैं उसके द्वारा हम को पा लेने के लियें । हमारे जीवन में जो कुछ भी घट रहा हैं सकारात्मक या नकारात्मक, प्रिय या अप्रिय यह परमेश्वर का कार्य हैं एक बात के लियें – वो हमे पा ले और हम उसे पा ले ।
पवित्र आत्मा इच्छा और काम दोनों बातो में उनकी भली इच्छा पूरी करने में आपकी सहायता करेगा ।
सिर्फ विशवास करे
एस. आर. मनोहर
From the Father’s Heart for this week will be uploaded tomorrow
தகப்பனின் இருதயத்திலிருந்து (25/02/2018)
தேவனை முழுமையாக அடைந்து கொள்ளுவதற்கான பாதை!
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
தேவன் மோசேயை, அவன் இருந்த உயர்ந்த இடமாகிய “பார்வோனின் அரண்மனையிலிருந்து” மிகவும் தாழ்வான “வனாந்தரத்திற்கு பின்புறம்” (ஊழியம் கொள்ளும் அனுபவத்திலிருந்து, தன் மாமனின் ஆடுகளை மேய்ப்பதாகிய ஊழியம் செய்கிற அனுபவத்திற்கு) என்ற நிலைமைக்கு கொண்டு வந்தார். சிறுமைப்படுதல், ஒன்றுமில்லாமை, சுய பெலத்தின் மேல் நம்பிக்கை அற்ற தன்மை, எல்லா திறமைகளையும் நஷ்டம் என்று எண்ணுதல், எல்லா வசதிகளையும் நஷ்டம் என்று எண்ணுதல் ஆகிய இவைகளை உள்ளடக்கிய “எல்லாவற்றையும் நஷ்டமென்று” எண்ணுகிற அனுபவம் தான் தேவ பர்வதத்திற்கு ஏறி, தேவனை அடைந்து கொள்ளுவதற்கான பாதை.
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்து எப்படி சிலுவையிலே எல்லாவற்றையும் இழந்ததின் மூலமாக நம்மை ஆதாயப்படுத்தி கொண்டாரோ, அப்படியே நாமும் நம்முடைய பழைய மனிதனாகிய ஆதாமுக்கு சொந்தமான எல்லாவற்றையும் இழந்தால் தான் தேவனை முழுமையாக அடைந்து கொள்ள முடியும். எனவே தான் தேவன் தமக்கு சொந்தமான பிள்ளைகளை (“வனாந்திர அனுபவம்”/”ராஜ அரண்மனையிலிருந்து-சிறைச்சாலைக்கு செல்லும் அனுபவம்”/”எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணுகிற அனுபவம்”) என்கிற, தம்மை முழுமையாக அடைந்து கொள்ளுகிற பாதையின் அனுபவத்திற்கு கொண்டு வருகிறார். அவர் நம்மை நிரப்புவதற்கு முன்பாக நம்மை வெறுமையாக்குகிறார்! அவர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டு சென்று தம்முடைய மகிமையை நமக்கு வெளிப்படுத்துவதற்கு முன்பாக நம்முடைய சுயத்தை நிர்மூலமாக்குகிறார்!
எல்லாவற்றிக்கும் மேலாக, மிகுந்த சந்தோஷத்துடன் தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய விரும்புகின்ற ஒரு வாழ்விற்கு நம்மை கொண்டு செல்லவே, தேவன் நம்மை மேற்கூறிய பாதையில் நடத்துகிறார். இயேசு கிறிஸ்து “கெத்செமனேயின் வேதனை”, “கபத்தாவின் அவமானம்”, “கொல்கொதாவின் சித்ரவதை” ஆகிய இவைகளை விட தேவனின் சித்தத்தை செய்ய மிகவும் விரும்பினது போல நாமும் நம்முடைய சிந்தனை, வார்த்தை, செயல் ஆகிய இவற்றில் (பொது இடங்களிலும், ரகசிய வாழ்விலும்) தேவனுடைய சித்தத்தை மட்டும் செய்யும் போது, தேவனின் கவனத்தை நம்மேல் கொண்டு வந்து அவரை முழுமையாக அடைந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவோம். நம்முடைய வாழ்வில் கடந்து வந்த மற்றும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற நன்மையான மற்றும் தீமையான (விரும்பத்தக்க/ விரும்பத்தகாத) எல்லா காரியங்களுமே தேவன் “நாம் தேவனிலும், அவர் நம்மிலும் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டிருக்க கூடிய” அனுபத்திற்கு நேராக தேவனால் வழிநடத்தப்படுவதாகும்.
தேவன் விரும்புகின்ற இந்த காரியத்தை செய்ய வாஞ்சையை தந்து, பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக!
விசுவாசிப்போம்!
ஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word